Perambalur: TVK branch secretary hacked with a sickle; fingers severed! Neighbor commits savage act!!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ஜெஜெ நகரில் வசித்து வருபவர் சேகர் மகன் லோகநாதன் (35). இவர் அப்பகுதியில் தவெக கிளை செயலாளராக உள்ளார். தனியார் டயர் கம்பனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது பக்கத்து வீட்டில் அவருடன் டயர் கம்பனியில் வேலை பார்த்து வருபவரான பெருமாள் என்பவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் லோகநாதனுக்கு திருமணத்திற்கு மீறிய உறவு பெருமாளின் மனைவியுடன் இருந்து வந்துள்ளதை கைவிடக்கோரி பல கண்டித்தும் லோகநாதன் கேட்கவில்லை என கூறப்படுகிறது. வெவ்வேறு எண்களில் இருந்து பெருமாள் மனைவி சூர்யாவை லோகநாதன் தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று தனது வீட்டு அருகே நின்று சைகை காட்டியதை பார்த்த பெருமாள், அவரது வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து வந்து லோகநாதன் தலை கை பகுதியில் சரமாரியாக வெட்டியதில் 2 விரல்கள் துண்டானது. இதில் காயமடைந்த லோகநாதன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாடாலூர் போலீசில் பெருமாள் தகவலை தெரிவித்து சரணடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லோகநாதன்











kaalaimalar2@gmail.com |
9003770497