Perambalur: Two persons arrested for possessing about 5 kg of Kutka items banned by state
பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் குரும்பலூர் கிராமத்தில் கந்தசாமி (70), லட்சுமி (45) ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ஹான்ஸ் (200-கிராம்), விமல் பாக்கு (3.975-கி.கி) மொத்தம் – 4.175 கிலோ கிராம், ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் கைது செய்து அவர்களை பெரம்பலூர் ஊரக போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.