Perambalur: Uppodai Sri Nagamuthu Mariamman Temple Chithirai Festival!

பெரம்பலூர், எளம்பலூர் ரோடு, உப்போடை ஸ்ரீ நாகமுத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முனிஷ்வரன், ஸ்ரீ எல்லை கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். நேற்று முகூர்த்த கால் நடுதல், காப்பு கட்டுதல், சக்தி அழைத்தலுடன், அன்று அம்மன் வீதி உலா வருதல் மற்றும் வானவேடிக்கை நடந்தது. இன்று ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஊஞ்சலில் தாலாட்டுதல், அன்னதானம், அம்மனுக்கு பொங்கல் வைத்து மகா தீபாரதனை நடத்தப்பட்டது. நாளை, பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது என கோயில் நிர்வாகிகள் மற்றும் உப்போடை கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!