Perambalur: VCK party members pelt stones in protest against the Puratchi Tamilagam State President Airport T.Moothy ! Glass is broken!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், புரட்சி தமிழகம் கட்சியின் சார்பில், இன்று பறையர் வாழ்வுரிமை அரசியல் மாநாடு, பறையர் சாதி மற்றும் பிறசாதி நட்பும் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தலைமையில் நடந்தது. அதில், அக்கட்சியின் மாநில தலைவர் ஏர்போர்ட். த.மூர்த்தி சிறப்புரை நிகழ்த்த வந்திருந்தார். இந்நிலையில், விசிக மற்றும் புரட்சி தமிழகம் இரு கட்சி தலைவர்களான கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏர்போர்ட் மூர்த்தி விசிக தலைவர் தொல்.திருமாளவனை சமூக ஊடகங்களில் விமர்சித்ததாக கூறப்படும் நிலையில், இன்று எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விசிக கட்சியினர் இன்று பெரம்பலூர் 4 ரோடு செல்லும் வழியில உள்ள தனியார் அரங்கில் அவர்களும் கூட்டம் நடத்த வேளையில், ஒன்று திரண்ட விசிகவினர் புரட்சி தமிழகம் கூட்டம் நடக்கும் அரங்கிற்கு முன்பு வந்து கண்டன கோசம் எழுப்பி கற்களை விட்டு எறிந்தனர். பின்னர், அங்கு புரட்சி தமிழகம் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை கிழித்தும், ரோடு சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிந்து கொடிக்கம்பங்களை தூக்கியும் எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஹோட்டல் நிர்வாகிகள் மெயின் ஷட்டரை இழுத்து மூடினர். பழைய டியூப் லைட்டுகள் கண்ணாடிகள் கொண்டும் தாக்கினர்.
ஏற்கனவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உதவிக்கு போலீஸ் படையை வரவழைத்தனர். அதற்குள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி ஆதர்ஸ் பசேரா சம்பவ இடத்திற்கு வந்து ஏர்போர்ட் மூர்த்திக்கு உரிய பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க செய்தார். விசிகவினரை கலைந்து போக செய்து அவர்களை புதிய பேருந்து நிலையத்தை கடந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், புரட்சி தமிழகம் கட்சியின் கூட்டம் முடிந்தவுடன் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஏர்போர்ட் மூர்த்தியை காரில் அனுப்பி வைத்தனர். இன்று மதியம் முதல் சுமார் 3 மணி நேரம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பாக இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.