Perambalur: Vendor commits suicide by falling into a well! Rescued by police with the help of fire and rescue teams!

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் சுப்பிரமணியன் (45). கோயில் அருகே மளிகை நடத்தி வந்தார். இவரது மனைவிக்கும் இவருக்கும் குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை முதல் அவரது உறவினர்கள், இவரை அக்கம்பக்கம் தேடி பார்த்த நிலையில், இவரது செருப்பு விவசாயி கிணற்றின் அருகே கிடந்துள்ளது. இது குறித்து இவரது உறவினர்கள் பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவியுடன் சுப்ரமணியனை சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!