Perambalur: We will not let Tamil Nadu bow its head, Oraniyil Tamil Nadu resolution meeting! Everyone is welcome!! District DMK in-charge V. Jagatheesan invites!!

தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க திமுக தலைவரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன் மொழியப்பட்ட்டுள்ள “தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம்” என்ற தீர்மான ஏற்புக் கூட்டங்கள், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, 22.09.2025, திங்கட்கிழமை, மாலை 6.00 மணியளவில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறும் தீர்மான ஏற்பு கூட்டத்திற்கு , பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் எம்.இராஜ்குமார் வரவேற்புரையாற்றுகிறார்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் (நான்) தலைமை வகிக்கிறேன். இதில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் முன்னாள் எம்.பியும் மாநில விவசாய அணி செயலாளரும், டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன். தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை தமிழினியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
கே.என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் ம.மணிவாசகம் நன்றியுரையாற்றுகிறார்.
இந்த தீர்மான ஏற்புக் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள்,கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497