Perambalur: Work in the Cradle Child Scheme; Eligible candidates can apply; Collector’s information!
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக செயல்படுத்தப்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிப்புரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள காவலர் பணியிடத்திற்கு 8-ஆம் வகுப்பு முடித்தவராகவும், 42 வயதிற்குள்ளும், இருத்தல் வேண்டும். மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.4,500/- வழங்கப்படும்.விண்ணப்பத்தினை https://perambalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கல்வி தகுதி மற்றும் முன் அனுபவ சான்று ஆகிய இணைப்புகளுடன் 20.01.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், கூடுதல் விபரங்களுக்கு 04328 – 275020 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.