Perambalur: You can apply for admission in government polytechnic diploma courses; Collector information!

பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதள முகவரி: https://www.tnpoly.in என்ற இணையதளம் மூலமாக 07.05.2025 முதல் நடைபெற்று வருகிறது. இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு கீழக்கணவாய், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்: ரூ.150 மட்டுமே ( மாணவர்கள் பதிவு கட்டணத்தை Credit Card, Debit card,மற்றும் Net Banking மூலமாக செலுத்தலாம் ) SC/ST மாணவ / மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 23.05.2025 ஆகும். மேலும், கல்வி கட்டணம் இல்லை சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் – ஆண்டு ஒன்றுக்கு ரூ.2, 200 மட்டுமே மூன்று ஆண்டுகளில் பட்டய படிப்பை ரூ.6,600- க்குள் படித்து முடித்து விடலாம். கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (SSLC / MATRICULATION) அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கீழக்கணவாய், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறை. (Civil)> இயந்திரவியல் துறை (Mechanical)> மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE)> மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE)> கணிப்பொறியில் துறை (Computer) ஆகிய தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன.

கீழக்கணவாய், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள். ஸ்மார்ட் கிளாஸ் வசதி (Smart Class Room) அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் (Fully Equipped Laboratory), மாணவர்களுக்கு அரசு இலவச விடுதி, மாணவியர்களுக்கு கல்லூரிக்கு எதிரில் அரசு இலவச விடுதி, இருபாலருக்கும் அரசின் கல்வி உதவித்தொகை, 2025 -2026 ம் கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் 5 மாணவியர்கள் ரூ. 50,000 பிரகதி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர்.

மீதமுள்ள ரூ.1,00,000 அடுத்தடுத்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற உள்ளார்கள். தகுதியுடைய மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் ரூ.1,000கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டை (Free Bus Pass). வேலைவாய்ப்பு பிரிவின் (Placement Cell) மூலமாக மூன்றாமாண்டு இறுதியிலேயே வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் இறுதியாண்டில் பயின்ற 167 மாணவர்களின் 100 சதவிதம் மாணாக்கர்களுக்கு கம்பெனியில் வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் குறைந்தப்பட்ச சம்பளம் மாதம் 16,500 முதல் 23,000 வரை பெற்றுள்ளார்கள்.

மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பாக விவரங்கள் அறிய அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் – 621 104. நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 04328-243200,243100 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035, தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!