Perambalur: You can apply to join the government music school! Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் இசைப் பள்ளி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாதசுரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர்ந்து பயில தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதுமானது. இதர பாட பிரிவுகளில் சேருவதற்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதியுடன், மாதந்தோரும் ரூ 400-/- ஊக்கத் தொகை வழங்கப்படும். அரசு பேருந்துகளில் இலவச பயணச்சலுகையும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ 350-/-. பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம் , (4வது) நான்காவது குறுக்குத் தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04328-275466 மற்றும் 94433 77570 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!