Perambalur: You can get maturity benefit under the Chief Minister’s Girl Child Protection Scheme; Collector informs!
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்புத் தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை பெற வேண்டிய பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் அல்லது மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. தற்போது
முதிர்வுத் தொகை பெற வேண்டி நிலுவையிலுள்ள பயனாளிகளின் விவரம் https://Perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வைப்புத்தொகை இரசீது நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல் பயனாளியின் வங்கி கணக்குப் புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் (தாய் மற்றும் மகள் இருவருக்கும்). முதிர்வுத் தொகை கோரி சமர்பிக்கும் பட்சத்தில் முதிர்வுத் தொகையானது பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். முதிர்வு தொகைக்கு சமர்பிக்கவேண்டிய சான்றுகளும் தவறாமல் அளித்த முதிர்வு தொகையினை பெற்று பயனடையுமாறு பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.