Places Permitted to Hold Local body Election Meetings: Perambalur Collector!
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிக் கூட்டம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும் என கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கும் வரும் பிப்.19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு, அரசியல் கட்சிக் கூட்டம் பெரம்பலூர் நகராட்சியில் வானொளி திடல், தேரடி வீதியிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் பாலக்கரையிலும், குரும்பலூர் பேரூராட்சியில் சிவன் கோவில் முன்பும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பேருந்து நிலையம், பூலாம்பாடி பேரூராட்சியில் மந்தைவெளி ஆகிய பகுதிகளில் மட்டும் அரசியல் கட்சிக் கூட்டம் உரிய அனுமதி பெற்று நடத்திட அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.