Pongal gift package with Rs. 2500 cash from the Government of Tamil Nadu: Panchayat President Initiated in Perambalur district.
தமிழ்நாடு அரசு சார்பில், பொதுமக்களுக்காக, ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அறிவிப்பு செய்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தனர். அதே போன்று, பெரம்பலூர் அருகே உள்ள எசனை மற்றும் கீழக்கரை ஊராட்சிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை, ஊராட்சி தலைவர்கள் ஜெயந்தி செல்லப்பிள்ளை (கீழக்கரை), சத்யா பன்னீர்செல்வம் (எசனை) ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர். ஊராட்சி துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் எசனை-கீழக்கரை அதிமுக பிரமுகர்கள் பன்னீர்செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.