Procedure to prevent swine flu infections; Release of the Namakkal collector
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் பன்றிகாய்ச்சல்(ஏஹெச்1என்1) தொற்று ஏற்படா வண்ணம் தடுக்க முறைகள்:
உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள வழிகாட்டுதலின் பேரில் கைகழுவும் முறைகளை கடைபிடிக்கவேண்டும். மேலும் 80 சதவீத பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று கைகளால் பரவுகிறது.
கைகழுவும் முறைகளை மேற்கொள்வதுடன் ஆஸ்பத்திரிகள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் 5 சதவீதம் லைசால் திரவம் பயன்படுத்தி சுத்தம் செய்வதன் மூலமாகவும் பன்றிக்காய்ச்சலை தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.
எனவே மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகள், போஸ்ட் ஆபீஸ்,பஸ், ரயில்வே ஸ்டேசன், அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், சினிமா தியேட்டர்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், மற்றும் பெரு வணிக வளாகங்கள் ஆகியவற்றில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு 5 சதவீதம் லைசால் திரவம் பயன்படுத்தி தரை தளங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
அத்துடன் பிளிச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்புதூள் ஆகியவற்றை முறையே 1:4 என்ற விகதத்தில் கலந்து சுற்றுபுறங்களில் தெளிக்க வேண்டும். இது சம்மந்தமாக எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தினசரி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.