Public Appeals to the Namakkal DRO for Patta

இலவச வீட்டுமனை பட்டா கோரி கிருஷ்ணாபுரம், உத்தமபாளையம் பகுதி பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
கிருஷ்ணாபுரம் மற்றும் உத்தமபாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் நகர பகுதியில் கிருஷ்ணாபுரம், உத்தமபாளையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மேச்சல் அரசு புறம் போக்கு நிலத்தில் அருந்ததியர் வகுப்பை சேர்ந்த 80 குடும்பங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.
இப்பகுதியில் குடியிருக்கும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி பலமுறை மனு கொடுத்துள்ளோம். தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. எனவே அருந்ததியர் வகுப்பை சேர்ந்த எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497