Request to the central and state governments to impose Zero GST on newspapers and televisions!

இந்தியா முழுவதும் இயங்கி வரும் நாளேடுகளுக்கு 5 சதவீதம் விளம்பரம் மற்றும் விற்பனைக்காக வரியை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன.

தற்போதைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில், நாளேடுகள், தொலைக்காட்சிகள், Weekly, Bi-wewkly, Mothlyயில் சிற்றேடுகள் நடத்தி வருவது பெரும் சவாலாக உள்ளது. பொதுமக்களுக்கு தகவல்களை கொண்டு போய் சேர்ப்பதிலும், ஜனநாயத்தை நிலைநாட்டுவதிலும், 4ம் தூணாக விளங்கும் பத்திரிகைகள், அச்சு காட்சி ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அரசியல் கட்சிகள் தங்களது தேவைகளுக்காக ஊடகங்கள் நடத்தி வந்தாலும் அவைகளும் திணறுகின்றன.

மேலும், செய்தித்தாள்கள் தயாரிக்க தேவைப்படும் மை, காகிதம், வண்டிச்சத்தம், மின்சாரம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் சம்பள உயர்வு, போன்ற பொருளாதார சுமைகள் நாளுக்குநாள் அதிகளவில் நாளேடுகளும், ஊடகங்களும் சந்தித்து வருகின்றன. அதனால், நாளேடுகளுக்கு 5 சதவீத வரியும், பிற மின்னணு ஊடகங்களுக்கு 18 சதவீத வரி என மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள வரிவதிப்பை முற்றிலும் நீக்கி பூஜ்ய வரிவிதிப்பை மேற்கொண்டால் ஊடகங்களின் பெரும் சுமையை குறைப்பதாக அமையும் என செய்தியாளர்கள், அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!