Seeking to offer gratuities and pensions Electricity Board workers demonstrated in Namakkal
நாமக்கல்லில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேசன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு துணை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் லட்சுமணன், செயலாளர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை குறித்து பேசினர்.
இதில் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி அமர்த்தி ரூ.380 கூலி வழங்க வேண்டும். பகுதி நேர பணியாளர்கள் அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் அனுமதித்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்து பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.