Students of the National Games medal winning 3 per Rs 1 lakh prize money offered Perambalur collector Srivenkata Priya
பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் 64வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற 3 மாணவிகளுக்கு தலா ரூ.1இலட்சம் வீதம் ரூ.3இலட்சம் பரிசுத் தொகையினை, பெரம்பலூர் எம்.எல்ஏ. ஆர். தமிழ்ச்செலவன் முன்னிலையில் , கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது :
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பவானி, கிருத்திகா மற்றும் சபிதா ஆகியோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதிலும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விளையாட்டு என்பது பொழுது போக்கிற்காக மட்டுமல்லாமல் உடல்நலம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனநலம், போன்றவற்றை சிறப்பாக பேனுவதற்காகவும், வாழ்க்கைக்கு தேவையான பயிறிசியளிக்கும் களமாகவும் விளங்கி வருகிறது. அத்தகைய விளையாட்டினை சமூகத்தில் நிகழ்கால மற்றும் எதிர்காலத்திற்கு முதலீடாக கருதி செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை, மாவட்டந்தோறும் விளையாட்டரங்கு ஏற்படுத்துதல், கிராமபுற விளையாட்டுகளை ஊக்குவித்தல், உடற்பயிற்சி மையங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட அளவிலான இருப்பிட பயிற்சி முகாம், பேரறிஞர் அண்ணா நினைவு போட்டி, மாவட்ட அளவிலான கேரம் போட்டி, ஓட்டப் பந்தயம், தடகளம், கபடி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பழு தூக்குதல் மாதாந்திர விளையாட்டு போட்டி, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிறிசி, மாவட்ட அளவிலான முதலமைச்சருக்கான போட்டி, ஊராட்சி மற்றும் மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டு போட்டிகள், இளைஞர் திறன் நல்வழிப்படுத்தும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு திறமையான விளையாட்டு வீரர;களை ஊக்கப்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் வீரர் வீராங்கணைகள் திறமை வாய்ந்த உடற்பயிற்சி ஆசிரியர்களால் பயிறிசியளிக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளுக்கும், தேசிய அளவிலான போட்டிகளுக்கும் தமிழக அரசின் செலவிலேயே அழைத்துச் செல்லப்படுகின்றனர். வெற்றி பெறும் வீரர்களுக்கு தமிழக அரசால் ஊக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து எதிர்கால வாழ்வில் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, கிராமபுறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இருக்கிறோம் என்னால் சாதிக்க முடியுமா என்ற ஐயப்பாடின்றி விடாமுயற்சியுடன் ஒருமித்த கருத்துடன் அனைவரும் பயிற்சி மேற்கொண்டால் தேசிய அளவிலான போட்டியில் சாதிக்க முடியும் என்பதற்கு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசினை பெற்றுள்ள இவர்களே சான்றாகும். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இதனை விளையாட்டு வீரர;கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழ்ச்செல்வன் பேசியதாவது: வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசிய அவர், தமிழகத்திலேயே 2வது ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் பெரம்பலூரில் அமைந்துள்ளது. அதற்கு சின்தடிக் மைதானம் அமைக்க மாவட்ட கலெக்டர் விருப்ப நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என்றும், சட்ட மன்ற உறுப்பினர் நிதி பெருமளவு மாவட்ட விளையாட்டு நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி, மாவட்ட தடகள பயிற்சியாளர் கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.