Subsidy for farmers to grow green fodder as an intercrop: Perambalur Collector Information!
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 2024-25-ஆம் ஆண்டிற்கு தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க பெரம்பலூர் மாவட்டத்திற்கு 50 ஏக்கர் இலக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.3000/- முதல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500/- வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது மேலும் குறைந்தது 0.5 ஏக்கர் அதிகபட்சமாக 1 ஹெக்டேர் நிலப்பரப்பில் தொடரந்து பல்லாண்டுகள் பயன்தரும் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருடகாலம் பராமரிக்கவேண்டும். பசுந்தீவனம் உற்பத்தி செய்ய விருப்பமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் முக்கியமாக எஸ் / எஸ்.டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஆகவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், அலைபேசி எண், ஆதார் எண் தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.