Tamil Language ‘Martyrs’ Day public meeting on behalf of DMK in Perambalur!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் தேரடி திடலில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
ஆர். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் த.கருணாநிதி வரவேற்றார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கு.க.அன்பழகன், பி.திருவரசன், சு.சதீஷ்,அ.தண்டபாணி, அ.மாது (எ) மருதமணி, சு.அருண்குமார், ஒன்றிய, நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் ஜி.ஆரோக்கியசாமி, க.சிவானந்தம், வெ.முருகேசன், மு.முருகானந்தம், பெ.இளையராஜா, ம.தமிழ்வேந்தன், பா.ரினோபாஸ்டின், குமரன், ரெ.பால்ராஜ், வ.செல்வன், மா.சலீம்பாட்ஷா ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழகத் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் ஆலங்குடி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மொழிப்போர் தியாகி மூங்கில்பாடி ரெங்கராஜ் – க்கு பொன்னாடை அனிவித்து கெளரவிக்கப்பட்டது.

இதில் மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், பட்டுச்செல்விராஜேந்திரன், என்.ஜெகதீஸ்வரன், சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும்- பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ். அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மகாதேவி ஜெயபால், டாக்டர் அ.கருணாநிதி, அருள்செல்வி காட்டுராசா, ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை, க.ராமலிங்கம், பிரபாசெல்லப்பிள்ளை, துணை பெருந்தலைவர்கள் கு.சாந்தாதேவி குமார், எம்.ரெங்கராஜ், பேரூர் கழகச் செயலாளர்கள் ஏ.எஸ்.ஜாகிர் உசேன், பி.சேகர், மு.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து .ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே.கரிகாலன், பெ.அன்பழகன், தங்க. கமல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ப. செந்தில்நாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், தொ.மு.ச. பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர். ரெங்கசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே. எம் .ஏ. சுந்தர்ராஜ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் க.அசோக்குமார், தம்பை.தர்மராஜ், புஷ்பவள்ளிஇராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் அ. அப்துல் கரீம், நகர மாணவரணி அமைப்பாளர் பா. ரினோபாஸ்டின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ஆர்.ராஜேஷ், ஆர்.அருண், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், வெற்றிச்செல்வன், ரா.சிவா, கணேசன்,
பெரம்பலூர் நகர கழக நிர்வாகிகள் நு.சபியுல்லா, கோ.ரெங்கராஜன்,கமலம் கோவிந்தசாமி, பெ.முத்துக்குமார, என்.ஜெயக்குமார், ரா.ரெங்கராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எம். மணிவாசகம் நன்றியு கூறினார்.

இந்த கூட்டத்தில் கழக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் குத்தாலம் பி. கல்யாணம் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழ் மொழிக்கென்று தனிச்சிறப்பு உண்டு. கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே தமிழ் மொழி தோன்றியது. தி.மு.க. ஆட்சியில் புதிய,புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு கொண்டு வரப்படும். மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கியது முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தான்.


தளபதி மு .க .ஸ்டாலின் தெருவிற்கு வந்தாலே கூட்டம் கூடி விடுகிறது. அந்த கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்து விவசாயிகளை பாதுகாத்தவர் கலைஞர், தற்போதைய 10 ஆண்டு கால அ.தி.மு.க.ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டங்களும் தீட்டப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். எங்களுக்கு 10 ஆண்டுகள் தாருங்கள் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம் என்றும் பேசினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!