The BJP government, which is bringing one nation, one law, why doesn’t it bring a single curriculum across the country, a question the public asks Prime Minister Modi?

மொழி என்பது தொடர்பியில் ஓர் ஊடகம் தான்! அது அறிவல்ல!! ஆனால், அதிக மொழிகளை தெரிந்து கொள்வதால் மட்டும் ஒருவர் அறிவாளி ஆகிவிடமுடியாது. தமிழ்நாட்டில், மும்மொழிக் கொள்கை கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசு தற்போது கொண்டுவந்துள்ள ஒரே நாடு, ஒரே சட்டம் போல, ஏன் அனைக்கும் ஒரே பாடத்திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுவரவில்லை என்றும், ஏழைக்கு ஒரு பாடத்திட்டம், பணக்காரர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர்களுக்கு ஒரு பாடத்திட்டமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பாஜக அரசு நாடு முழுவதும் இயங்கி வரும், கேந்திர வித்யாலாயா, சி.பி.எஸ்.இ, மெட்ரிக், நவதோயா, மிலிட்டரி, இன்டர்நேசனல் ஸ்கூல், அந்தந்த மாநில வழி பாடத்திட்டம் என அனைத்து பள்ளிகளையும் மூடிவிட்டு ஏழை – பணக்காரர் என வித்தியாசம் இல்லாமல், அனைத்து குழந்தைகளுக்கும் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை, தேசபக்தி கொண்டதாக கூற்படும் பாஜக தலைமையிலான அரசு ஏன் கொண்டு வர இது முயற்சி எடுக்கவில்லை. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் அதிக அளவில் பாஜகவின் ஆதரவாளர்களே பள்ளிகள் நடத்தி வருகின்றனர்.

இந்திய நாட்டின் மீதும், மக்கள் மீதும் பற்றுக் கொண்டதாக கூறிக் கொள்ளும் பாஜக அரசு அக்கறை கொண்டிருக்குமானல், அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும், ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும். இதனால் தான் ஒரே நாடு, ஒரே சட்டம் போல, ஒரே பாடத்திட்டம் என அமையும். பாஜக ஹிந்திக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு உண்மையாக ஹிந்துக்கள், கல்வியைத் தேடியும், தேடிய செல்வத்தை கல்விக்காக செலவழித்தும் கல்வியை பெற்று வருகின்றனர். குழந்தைகள் விரும்பும் மொழிகளில் கற்றுக் கொள்ளும் வகையில் ஒரு மொழி பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும். இரு மொழி, மும்மொழி கொள்கைகளை கைவிடவேண்டும்.

ஏழை ஹிந்து மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளதாக பாஜக அரசு இருந்ததால், நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என அனைத்து தரப்பினரும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!