The Government of the District Monitoring Officer to inspect the development work

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா நாமக்கல்லுக்கு வந்தார். அவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன் கடை, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு திட்டப்பணிகளை பார்வையிட்ட அவர் அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை வளள்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா கலந்துகொண்டு பேசியதாவது:

வேளாண்மை துறையின் சார்;பில் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் உள்ளிட்டவற்றை தேவையான அளவு இருப்பு வைத்து கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவற்றை வழங்கிட வேண்டும். விவசாய நிலங்களில் ஒவ்வொரு பயிர் சாகுபடிக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி, பழச்செடிகள் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளுக்கு தேவையான அளவு வழங்கிட வேண்டும். பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப ரேசன் கார்டுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பொருட்களை தடையின்றி வழங்கிட வேண்டும். சுகாதார துறையின் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதோடு பொதுமக்களுக்கு நோய் தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு உரிய பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் அளிப்பதோடு அவர்களுக்கு அரசின் மகப்பேறு நிதியுதவி கிடைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைத்திடும் வகையில் நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் வேகமாக முடித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ பழனிசாமி, சப் கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் மாலதி, திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!