The journalists were concentrating on the gravity demonstration at Perambalur.
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் பெரம்பலூர் கிளை சார்பில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டியூஜே மாநில தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை சுமார் 5 மணியளவில் பெரம்பலுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டியூஜே சார்பில் நடந்தது.
பத்திரிகையாளர்களின் பல ஆண்டு கோரிக்கைகளான நலவாரியம் அமைத்தல், பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க தனி சட்டம் நிறைவேற்றுதல், பெரம்பலூர் மாவட்டத்தில் பத்திரியாளர்களுக்கு வீட்டுமனை, தனியார் பள்ளிகளில் 50 சதவீத கட்டணச் சலுகை, ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரும்பாவூர், பாடாலூர், குன்னம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.