The leadership has decided to change 15 district administrators in the AIADMK after the internal party elections!

Edappadi K Palaniswami. Credit: PTI File Photo

தமிழ்நாட்டில் அதிமுக மிகப் பெரிய ஜனநாயக முறை கொண்ட கட்சியாக உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் மாநில கட்சியின் இடத்தை தொடர்ந்து பிடிக்க முடியவில்லை. மக்கள் மனதில் அக்கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், தொடர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர்.

திமுக கூட்டணி வெற்றி பெறுகிறுது என்றால் அதிமுக ஆதரவாளர்களின் அதிருப்தியாகும். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்காமலும், மாற்றுக் கட்சிக்கு வாக்காளிக்காத தொண்டர்கள் அதிக அளவில் அதிமுகவில் மட்டும் உள்ளனர். அவர்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள். அந்த தொண்டர்களாலேயே அதிமுக என்னும் கட்சி இன்னும் கொடி கட்டி பறக்கிறது. அந்தக் கட்சியில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, கட்சி டிடிவி தினகரன், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என பிரிந்தாலும், வாரிசு அல்லாத கட்சி தலைவாராக தொண்டரான ஈ.பி.எஸ் ( எடப்பாடி கே.பழனிசாமி) கை ஓங்கி கட்சி தலைமை நிமிர்ந்துள்ளது.

ஆனால், சிலர், பின்வாசல் வழியாக பதவிக்கு வந்தவர்கள், சிபாரிசில் பதவி பெற்றுக் கொண்டு வேலை செய்யாமல் இருப்பவர்கள், எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பர்கள், கட்சியையும், கட்சியினரையும், காட்டி கொடுப்பவர்களின் பட்டியலை தற்போது அதிமுகவின் தலைமைக் கழகம் சேகரித்துள்ளதாகவும், வரும் உட்கட்சி தேர்தல் முடிந்த பிறகு அவர்களை மாற்றுவதோடு, கட்சியின் உண்மை விசுவாசிகள், பிரிந்து சென்றவர்கள், ஒதுங்கி நிற்கும் தொண்டர்களை ஒருங்கிணைத்து வரும் சட்ட மன்ற தேர்தலை திறமையாக எதிர்க் கொண்டு ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் வைட்டமின் -M கொடுக்கமாலேயே பெரும்பாலான தொகுதிகளில் வாக்குகளை அதிக அளவில் பெற்றுள்ளதையும், பாராளுமன்ற தேர்தலில் முறையாக பணி செய்யாதவர்களையும் பட்டியலை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் கட்டணமில்லா பஸ் பயணம், மாணவர்கள் நிதியுதவி போன்ற திட்டங்களை தாண்டி, வரும் தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்லவும், அதிமுக தலைமை வியூகம் வகுத்து வெற்றியை அள்ள தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்கள் சூடு பிடிக்க தொடங்கும் எனவும் தெரிகிறது. இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!