The load-bearing wall of a lorry carrying gravel near Perambalur collapsed and the canal collapsed. New Groom Injured!


பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில், இன்று மதியம் சுமார் 1.15 மணி அளவில் அங்குள்ள தனியார் கிரஷரில் இருந்து கும்பகோணத்திற்கு ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு லாரி எசனை இந்தியன் வங்கி அருகே வந்து கொண்டிருந்தது. குறுகிய சாலை என்பதால், அங்கு சில வாகனங்கள் எதிரே நின்றது. அதனை கடந்து செல்ல முயன்றது. இடவசதி இல்லததால் லாரி அதிக பாரத்துடன் நின்று கொண்டிருந்தது. சாலையை ஒட்டி, எசனை ஏரியில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாய் சாலையை ஒட்டி செல்கிறது.. அதற்கு சிமெண்டால் ஆன தடுப்பு கட்டப்பட்டுள்ளது. சுவரின் மேல் பகுதியில், சாலை உள்ளது. விளிம்பு அருகே லாரி நின்றதால் சாலையின் பாரம் தாங்கமல் கால்வாயின் தடுப்பு சுவர் உடைந்தது. இதில் லாரி எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மின் கம்பங்களும் சாய்ந்தன. கிராமம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்ட்டது. இதில், ஆலம்பாடி கிராமத்தைச் சார்ந்த மாரிமுத்து மகன் குமார் (வயது சுமார் 28) மீது மின்கம்பம் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்ததார். பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு வரும் 2 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மின்துண்டித்து உடைந்து விழுந்த கம்பங்களுக்கு பதிலாக புதிய கம்பங்களை நட்டு, மின்சாரம் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளளனர்.

லாரி கும்பகோணத்தை பாரத்குமார் என்பவருக்கு சொந்தமானது. கருப்பண்ணன் மகன் மணிவேல் ஓட்டி வந்துள்ளார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!