The Lorry Owners Association requested the government to operate the trucks for the Sterlite plant

ஸ்டெர்லைட் ஆலைக்கு லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசுக்கு நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் வாங்கிலி மற்றும் செயலாளர் அருள் சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இயங்கி வந்தன.

இந்த ஆலை கடந்த 2 மாதங்களாக இயங்காத காரணத்தால், அதில் இயங்கி வந்த வாகனங்கள், அதன் மூலம் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்ற சுமார் 4 ஆயிரத்து 500 டிரைவர்கள், உதவியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்களும் வாகனத்துக்குப் பெற்ற வங்கி கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்த ஆலை மூலம் மறைமுகமாக பயனடைந்து வந்த சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!