The PM urged the agitating farmers to meet : makkal sevai iyakka leader arrested in perambalur

பெரம்பலூர் : தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கலெக்டர் கார் முன்பு தொழுநோயாளி வேடம் அணிந்து போராடிய மக்கள் சேவை இயக்கத் தலைவர் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் சேவை இயக்கம் அகில இந்திய தலைவர் தங்க. சண்முக சுந்தரம் இன்று, தொழுநோயாளி போல் விவசாயிகளை நடத்தும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தமிழக விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பிரதமர் குறைகளை கேட்டறிய வேண்டும்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், சேல் கேஸ், மீத்தேன், ஓ.என்.ஜி.சி கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட கூடாது. ரூபாய் 92000 கோடி ரூபாய் செலவில் ஆய்வு என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கும் இத் திட்டத்தை கொல்லைப்புற வழியாக நிறைவேற்றிட துடிக்கும் மத்திய மாநில அரசின் இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திட மத்திய மாநில அரசுகள் இயற்கை வளங்களை அழிக்காமல் மாற்று வழிகளில் சாண எரிவாயு, காய்கறி கழிவுகள், இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி, காற்று மூலம் சுற்றுப்புறச் சூழலை பாதிக்கா வண்ணம் திட்டத்தை தொலைநோக்கு பார்வையில் நிறைவேற்ற அரசுகள் முன் வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கார் முன்பு தொழுநோய் போல் வேடமிட்டு தங்க. சண்முக சுந்தரம் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரும் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் எஸ்.ஐ அகிலன் தலைமையில் வந்த போலீசார் தங்க.சண்முக சுந்தரம் மற்றும் கட்சி பிரமுகார் பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!