Perambalur: The police arrested a person who rented a house and sold banned Gutka, Panmasala, Hans products!

பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தில், அரசு தடை செய்த குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர், எஸ்.எஸ்.ஐ ஆண்டவர், போலீசார் கவுதம் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் பேரளி கிராமத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, அய்யாசாமி (70), தனது வீட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் 225 கிலோ (300 கிராம் பண்டல் -750 பாக்கெட்கள்) ரூ. 59,280 மதிப்புள்ள கூல் லிப் 28.728 கிலோ (208 கிராம் பண்டல் – 285 பாக்கெட்கள்) ரூ. 12 ஆியரம் மதிப்புள்ள விமல் பான் மசாலா 7.50 கிலோ (75 கிராம் பண்டல் – 100 பாக்கெட்கள்) என மொத்தம் ரூ. 1,61,280 மதிப்புள்ள 261 கிலோ 228 கிராம் எடை கொண்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அய்யாசாமி வைத்திருந்தரொக்கம் ரூ.15, 700-யும் குட்கா பொருட்களையும்பறிமுதல் செய்ததோடு, வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!