The pregnant woman was killed and burnt due to a family dispute at Perambalur husband escaped
பெரம்பலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் கவுண்டர் தெருவை சேர்ந்தவர்கள் நாகராஜ்(30),கலைச்செல்வி(26), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று புவனாஸ்ரீ(4), பவித்ரா(2) என இரு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் விவசாயியான நாகராஜுக்கு அவரது அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்த தகவல் கடந்த ஆண்டு கலைச்செல்விக்கு தெரிய வரவே நாகராஜுக்கும் கலைச்செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குடும்பத்தார் மற்றும் உறவினர் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில், அண்ணன் மனைவியுடான கள்ளத்தொடர்பை கைவிட்டு, மனைவியோடு நன்நடத்தையுடன் வாழ்வதாக உறுதியளித்த நாகராஜ், மீண்டும் அண்ணியுடான கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார்.
இதனையறிந்த கலைச்செல்வி கனவர் நாகராஜை கண்டித்ததால் கனவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த நாகராஜ் கலைச்செல்வியை அடித்து கொலை செய்து, வீட்டின் முதல் மாடியில் வைத்து மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, தந்தை ராமர், தாய் வீரம்மாளுடன் தப்பி சென்று தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் நாகராஜு வீட்டின் மாடி பகுதியிலிருந்து ஒரு விதமான கருகிய வாடை வருவதை உணர்ந்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் ஆய்வு செய்து கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடி தலைமறைவான நாகராஜ் உள்ளிட்ட அவரது குடும்பத்தாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
5 மாத கர்ப்பினி பெண் ஒருவர் அவரது கனவரால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.