The state Govet. Pongal Gift Bag with cash of Rs 2500 for the distribution of free dhoti, saree, in the presence of the MLAs, D.R.O initiated

அரிசி பெறும் 1.81 லட்ச ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியினை டி.ஆர்.ஓ ராஜேந்திரன், எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) இரா.தமிழ்ச்செலவன் ( பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தில் பயன் பெறும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பினை அறிவித்துள்ளார்கள். ரேசன் கடைகளில், அரிசி குடும்ப அட்டைகளுக்கு, மாதந்தோறும் வழக்கமாக விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களுடன் சேர்த்து கூடுதலாக, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை இத்துடன் தலா 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஒரு நல்ல துணிப்பை மற்றும் முழுநீள கரும்பு மற்றும் ரூ.2500 ரொக்கத்துடன் ஜன.12 வரை நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறத்தவறிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.1.2021 அன்று வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் த.செல்வக்குமரன், துணைப்பதிவாளர்கள் பாண்டிதுரை, கே.கே.செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) சக்திவேல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பிரேமலதா, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எம்.இராணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் ஆலத்தூர் ஒன்றிய செயலாளருமான என்.கே.கர்ணன், நிலவள வங்கித் தலைவரும், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளருமான என.சிவப்பிரகாசம் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவுத் துறை மற்றும் தாசில்தார் அருளானந்தம் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!