The student complained directly to the Collector at the grievance meeting that the non-payers were being made to stand for hours!

பெரம்பலூர் கலெக்டர் அலுலகத்தில், இன்று திங்கட்கிழமை தோறும், நடக்கும், பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிலும், சீருடையில் வந்த பள்ளி மாணவி தனது தந்தையுடன் வந்து, மனு ஒன்றை பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியாவிடம், கொடுத்தார். அதில், அந்த மாணவி படிக்கும், கொரோனா காலத்திற்காக பள்ளி கல்வி கட்டணம் செலுத்தாததால், வகுப்பிற்கு வெளியே பள்ளிக்குள் மணிக்கணக்கில் நிற்ப வைப்பதாகவும், இதனால், மனம் உடைந்து, பாடங்களை முழுமையாக படிக்க முடியவில்லை என்றும், தன்னை போலவே, கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளிக்கு வெளியே நிற்க வைப்பதாகவும், தெரிவித்திருந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்த கலெக்டர் வெங்கடபிரியா கல்வித்துறை அலுலர்களுக்கு உத்திரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்களை மணிக்கணிக்கில் வகுப்பிற்கு வெளியே நிற்க வைப்பதை விட்டு விட்டு பள்ளி நிர்வாகங்கள், அவர்களது பெற்றோர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!