The welfare schemes of the Central Government should be taken to the people: Minister Murugan
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பிஜேபி உள்ளாட்சி பிரநிதிகள் மத்திய அரசின் நலத்திட்டங்களை தங்களது பகுதிகளுக்கு கொண்டு செல்ல அயராது உழைக்கவேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா உள்ளாட்சி பிரநிதிகளுக்கான 2 பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமிற்கு பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதகார ரெட்டி தலைமை வகித்தார். மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.
முகாமில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு பேசுகையில், இப்பயிற்சி தனித்துவம் வாய்ந்தது, உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளின் செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பவதை விளக்குவது இந்த பயிற்சியின் நோக்கமாகும். இப்பயிலரங்கில் பல தலைவர்கள் வழிக்காட்டு நெறிமுறைகளை எடுத்துரைப்பது இதற்கு மேலும் மெருகூட்டும் . உள்ளாட்சி பிரநிதிகள் தங்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று செயல்படுத்த வேண்டும், மேலும் தங்களது பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி பொதுமக்களிடம் நற்பெயரை ஈட்டவேண்டும், மத்திய அரசின் திட்டங்களை தங்களது பகுதி பொதுமக்களிடம் கொண்டு செல்ல அயராது உழைக்கவேண்டும் என தெரிவித்தார்.
தொடந்து நடந்த பயிலரங்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுசெயலாளர் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர் நயினார்நாகேந்திரன் எம்எல்ஏ, சரஸ்வதி எம்எல்ஏ உட்பட பலர் பேசினர். இதில் மாநில துணை தலைவர் துரைசாமி, மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்யாசுந்தர், மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் கலந்துகொண்டனர்.