Those who tried to Siege to the Thanjavur Collectorate demanding to fill Anganwadi workplaces
தஞ்சாவூர் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் காலிப்பணியிடங்கள் தஞ்சை மாவட்டத்தில் 1246 பணியிடங்களை நிரப்பக்கோரி கடந்த பல மாதங்களாக தமிழ்நாடு சமூக நலத்துறைப் பணியாளர் சங்கம் மற்றும் அனைத்து அங்கன்வாடி பணியாளர் உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராடி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தி பல மாதங்கள் ஆகியும் பணியிடங்கள் நிரப்பாததால் ஆட்சியர் அலுவலகத்தை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முற்றுகையிட முயன்ற, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் கூறுகையில், பணியிடங்களை நிரப்பக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. இந்நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக பெரும் போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தனர். . மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சங்கர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கைது செய்யப்பட்டு காவல் துறை வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.