TN to seek arrears of sugarcane farmers protest in PERAMBALUR sugarcane growers association.

sugane-growers-perambalur பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பெரம்பலூர் சர்க்கரை ஆலை உடனே வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், 2016-17 க்கு கரும்பிற்கான புதிய விலையை மத்திய அரசு அறிவிக்காததை கண்டித்தும், அறிவிக்கபட்டு பல ஆண்டுகள் ஆகியும் கரும்புக்கான பரிந்துரை விலை ரூ.450 -யை வழங்கவும்,

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய வகையில் பாக்கி தொகை ரூ.16 கோடியை பெற்றுத் தரவும்,

அமராவதி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மொலாஸஸ் வழங்கிய வகையில் நிலுவைத் தொகை ரூ.96 லட்சத்தை வசூலித்து வழங்க கோரியும்,

ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதை கை விட்டு, இளம் வயதினரை வேலைக்கு அமர்த்த வேண்டும், அரசே கரும்பு விவசாயிகளின் பணத்தை வைத்துக் கொண்டு கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் வாங்கிய பயிர் கடனுக்கு அபராத வட்டி விதிப்பதுடன், நகை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் பாராபட்சமின்றி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,

பெரம்பலூர் சர்க்கரை ஆலையை நவீனப் படுத்த வேண்டும், 18 மெகா வாட் இணை மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருபதுக்கும் மேற்பட்டேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!