TRB : Senior lecturer in teacher education and training institutions of the district. Lecturer, a young lecturer applications Distribut such as CEO Office from tomorrow
ஆசிரியர் கல்வியியல் மற்றும் மாவட்ட பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர். விரிவுரையாளர், இளம் விரிவுரையாளர் போன்ற பணியடங்களுக்கான விண்ணப்பங்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஜுலை 15 முதல் வினியயோகம்
முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல்:
ஆசிரியர் கல்வியியல் மற்றும் மாவட்ட பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர். விரிவுரையாளர், இளம் விரிவுரையாளர் போன்ற பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் போட்டி எழுத்து தேர்விற்கான விண்ணப்பங்கள் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 15.07.2016 முதல் 30.07.2016 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ ரொக்கமாக செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.07.2016 அன்று மாலை 5.00 மணிக்குள் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்படக் கூடாது. அவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்போட்டி எழுத்து தேர்வு 17.09.2016 அன்று நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.