“Ulavarai Thedi Velanmai – Farmers Welfare Department” project; Tamil Nadu Chief Minister M.K. Stalin to launch it tomorrow!
வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்புத்துறைகளான கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் எடுத்து கூறி விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் வட்டாரத்தில் இரு கிராமங்களில் முகாம்கள் நடைபெறும். வேளாண்மை மற்றும் சகோதரத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் கலந்து கொள்வார்கள்.
இத்திட்டம் தமிழக முதலமைச்சரால் 29.05.2025 அன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி லைக்கப்டது. வைக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில், மேலப்புலியூர் கிராமத்திலும், ஆலத்தூர் வட்டாரத்தில் செட்டிகுளம் மற்றும் தேனுர் கிராமத்திலும், வேப்பூர் வட்டாரத்தில் பேரளி கிராமத்திலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் கைகளத்தூர் மற்றும் அரும்பாவூர் கிராமத்திலும் முகாம்கள் நடந்தது. இம்முகாமில் வேளாண்மை மற்றும் சகோதரத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் விவசாய பெருமக்கள் தங்களது வயல்களில் மண்மாதிரி எடுத்து வந்து முகாம் நடைபெறும் நாளில் பகுப்பாய்வு செய்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற ஆவணங்களை எடுத்து வந்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் மற்றும் இதர திட்டங்களுக்கான நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை போன்ற வேளாண் இடுபொருட்களை சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.