The Mediation Center for Settlement is ready to guide a simple solution without fee. The judge is calling to take advantage of the public

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச மைய தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தலைமை வகித்த பேசிய மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொ) என்.விஜயகாந்த் பேசியதாவது:

தமிழ்நாடு சமரச மையம், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது. வழக்குத் தரப்பினர்கள், தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்துகொள்ள ஏதுவாய் நீதிமன்றம் இங்கு வழக்குகளை அனுப்புகிறது. இங்கு 40 மணி நேரம் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்கு தரப்பினர்கள், சுமூகமான வழக்கை முடித்துக்கொள்ள உதவுவர். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்குத் தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனியறைகள், காத்திருக்க இடவசதி முலியவை சமரச மையத்தில் உள்ளன. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும், நாள் முழுவதும், சமரச மையம் இயங்கும்.

சமரச முயற்சி தனியறையில் நடத்தப்பட்டு இங்கு நடப்பவை அனைத்தும் மற்றவருக்கு தெரிவிக்கப்படாமலும், நீதிமன்றத்தில் விவாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்படும்.

வழக்கு தரப்பினர்கள் தாங்களே முன் வந்து ஒப்புக்கொள்ளும் தீர்கள் எட்டப்படும். மிக எளிய முறையில், வேகமாகவும், பண விரயமில்லாமலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தீர்வுகளை காண சமரசம் உதவுகிறது.

வழக்கு தரப்பினர்கள் நேரடியாகவும், சுமூகமாகவும் தங்களுக்குள் பேசி நிரந்தரமாக தீர்வு காணவும், வழக்கு தரப்பினர்கள் தங்கள் உள்மனம் திறந்து தங்களுடைய கோபதாபங்களை தெரிவித்து எதிர்தரப்பின் நிலையை அறியவும் ஒரு வாய்ப்பாக அமையும். வழக்குகளை விரைவாக நீதிமன்றங்கள் முடிக்க ஒரு உதவியாகவும், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறையின் மேல் மக்கள் நம்பிக்கை பெருகி மேலும், மேலும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு வேறு வழி தேடாமல் நீதிமன்றங்களை அணுக ஒரு தூண்டுகோலாகவும் அமையும்.

அனைத்து மாவட்டங்களிலும் சமரச மையங்கள் செயல்படும். பயிற்சி பெற்ற சமரசர்கள் எல்லா மையங்களிலும் செயல்படுவார்கள். நீதிமன்றங்கள் வழக்குகளை சமரச மையத்திற்கு சாற்றி அனுப்பும். சமரசர்கள் அந்த வழக்கில் சமரச முயற்சி மேற்கொள்வார்கள். வழக்கு தரப்பினா;கள் சமரசா;கள் முன் நேரடியாக முன்னிலையாகி சமரசம் நடத்தப்படும். முடிவு மட்டும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும்.

இம்மையத்தில் முதலில் சமரசத்தைப் பற்றி தெளிவாகவும், வழக்கை முடித்துக்கொள்வதில் உள்ள நன்மைகளையும் எடுத்து கூறுவார்கள். தரப்பினர்களிடையே நேரடியான உண்மையான, தேவையான பேச்சு வார்த்தை நிகழ உதவுவர். தரப்பினர்கள் மற்றவருடன் பேசி, இணைந்து செயல்பட்டு தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவோ, பெற்றுக்கொள்ளவோ உதவுவர். தரப்பினர்களுக்கு உடனடி பொருளாதார நன்மை கிடைத்திடவும், செலவு, நேரம் சிரமங்களை குறைத்திடவும், மனஉளைச்சலிலிருந்து விடுதலை பெறவும், நடைமுறைக்கு ஏற்ற, இணைந்து செயல்படுகிற பலவிதமான தீர்வுகளையும் பெற முடியும். எனவே வழக்கு தரப்பினரும், எதிர்தரப்பினரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என தெரவித்தார். பின்னர், தீர்வு மையம் மூலம் விவாகரத்து பெற்ற தம்பதியினர், ஒருவர் மற்றொருவருக்கு மாவட்ட அமர்வு நீதிபதி, சமசரர்கள் முன்னிலையில் ஜீவனாம்சம் வழங்கினார். வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

முன்னதாக மூத்த வழக்கறிஞர் ரெங்கசாமி, அய்யம்பெருமாள், துரைசாமி, உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு சமசரர் வில்லை வழங்கினார். நீதிபதிகள், வினோதா, தலைமை குற்றிவியல் நீதிபதி, பார் அசோசியசன் செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் முஹம்மது இலியாஸ், மூத்த வழக்கறிஞர்கள் சமசர தீர்வு மையத் தேவையை எடுத்துரைத்தனர்.

இந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசாமித்தல், வங்கி மேலாளர்கள், சமரச வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி நன்றி தெரித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!