11-6 super 30 col.jpg-1

பெரம்பலூர் : பெரம்பலூர் மற்றும் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளிகளை தொடர்ந்து இந்தாண்டு முதல் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சூப்பர் – 30 சிறப்பு வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் காரணமாக கடந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் மிகவும் முன்னேறி தற்போது வெளியான 12 ஆம் வகுப்பில் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே 2 ஆம் இடம் பெற்றுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பெரம்பலூர் மாவட்ட அரசு கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகளையும், மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை இடங்களையும் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் தற்போது மாவட்டத்தில் உள்ள 3 கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப்பிரிவில் 1,490 மாணவ, மாணவிகளும், முதுகலைப்பிரிவில் 50 மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயிலும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களை தமிழகத்தின் சிறந்த மருத்துவ கல்லூhp, அண்ணா பல்கலைக்கழக சிறந்த பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மருத்துவம்-30, சிறப்பு பொறியியல்-30, என்ற பெயரில் 11, 12 ஆம் வகுப்புகளில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நன்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சூப்பர் 30; வகுப்புகள் 24.6.2013 முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு,சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரம்பலூர், சு.ஆடுதுறை, பாடாலூர் ஆகிய பள்ளிகள் மற்றும் அப்பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள சூப்பர் 30 வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.

மேலும் இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாடத்துடன் தன்னம்பிக்கையூட்டும் மனவளப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

சூப்பர் 30 வகுப்புகளின் துவக்க நிகழ்ச்சி இன்று (11.6.2015) பெரம்பலூர், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மதுசூதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்;தலைவர் (பொ) அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,

சூப்பர் 30 சிறப்பு வகுப்புகள் 2013 ஆம் ஆண்டில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 2014 ஆம் ஆண்டில் சு.ஆடுதுறையிலும் துவக்கபட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தொடங்கப்படுகிறது.

சூப்பர் 30 வகுப்பில் சென்ற ஆண்டில் பயின்ற மாணவன் எஸ்.உதயகுமார் தற்போது சென்னை அரசு மருத்துவகல்லூhயில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றான்.

இந்த ஆண்டு (2015) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சூப்பர் 30 வகுப்பில் பயின்ற 57 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றதோடு, 2 பேர் தவிர 55 மாணவ, மாணவியர்களும் 900 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்.

இதில் 19 மாணவ, மாணவிகள் 1100 ற்கு மேற்பட்ட மதிப்பெண்களையும், 29 மாணவ, மாணவிகள் 1000 முதல் 1100 மதிப்பெண்களுக்குள்ளும், 7 மாணவ, மாணவிகள் 900க்கு மேற்பட்ட மதிப்பெண்களையும், 2 மாணவ, மாணவிகள் 800க்கு மேற்பட்ட மதிப்பெண்களையும், பெற்று தோச்சி பெற்றுள்ளனா;. மேலும் 9 மாணவ, மாணவிகள் கணக்கு பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

எனவே இன்று சூப்பர் 30 வகுப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்கள் தாங்கள் இந்த சாதனைகளை பொpதாக கருதாமல், இதனை தாண்டி அதிக மதிப்பெண்கள் பெற இயலும், தலைசிறந்த மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பயில வேண்டும் என்ற நோக்கத்தில் நன்கு பயில வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மிகப் பெரிய வெற்றிகளை பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமைசேர்க்க வேண்டும் என்பதே ஆகும்.

அதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும். பெற்றோர் 12 ஆம் வகுப்பு பயிலும் தங்களது பி;ள்ளைகளின் எதிர்காலம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்துதான் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி இந்த ஒரு ஆண்டிற்கு விடுமுறை நாள்கள், பண்டிகைகள் என்று காரணம் கூறி விடுப்பு கேட்காமல், மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளித்து ஊக்கம் கொடுக்க வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, சூப்பர்30 ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரம்பலூர் ஜெயராமன், பாடாலூர் அம்பிகாபதி, பாடாலூர் ஊராட்சித்தலைவர் வேல்முருகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!