210 Days for World Prosperity at Brahma Rishi Mountain

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் அமைந்துள்ள பிரம்ம ரிஷி மலை அடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர்; கோவிலில் உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், மனிதர்களிடம் ஜீவகாருண்ய சிந்தனை, தர்ம சிந்தனை தழைத்து ஓங்கவும், தொடர்ந்து உலகத்தில் ஏற்படும் கடுமையான வறட்சி,பூகம்பம், நிலநடுக்கம், பேய் காற்று ,இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும் வேண்டி, 210 மகா சித்தர்கள் யாகம் 210 நாட்கள் தொடர்ந்து குருபூஜையாக நடத்திட திட்டமிடப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி ஆடி அமாவாசை அன்று நடந்தது.

பிரம்மரிஷி மலை தபோவனத்தின் அன்னை சித்தர் ராஜ்குமார் தலைமை வகித்து தொடர் யாகசாலை பூஜையை தொடங்கிவைத்து ஆசிவழங்கினார். முதல் நாளன்று பூரிமலை அமுதமா மகரிஷி சித்தருக்கு யாகமும், மகா பூர்ணாகுதியுடன் தூப, தீபஆராதனை நடந்தது. இந்த யாகத்தை பிரம்மரிஷி மலை இளம்தவயோகி தவசி நாதன் நடத்திவைத்தார். மகாசித்தர்கள் அறக்கட்டளை ரோகிணிராஜகுமார், இலங்கை ராதா மாதாஜி மற்றும் சாதுக்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.

தினமும் மாலை 5 மணிக்கு 210 நாட்கள் தொடர்ந்து நடக்கும் யாகத்திற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை, சிங்கப்பூர் குருகடாட்சம் மெய்யன்பர்கள், சித்தர்களின் குரல் ஆன்மீக மெய்யன்பர்கள் செய்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!