40 people not indicted for violating 144 orders in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் குறித்த மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை மதிக்காமல் பொதுமக்கள் தங்கள் இஷ்டம் போல தேவையின்றி வீதிகளில் நடமடுவதை போலீசார் கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கொரோனோ வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் வரும் அடுத்த மாதம் 14ம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிரப்பித்துள்ளது. அதே போல தமிழக அரசு வரும் 31ம்தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள இந்த இரண்டு உத்திரவினால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், ஹோட்டல்கள், தேநீர் விடுதிகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் கொரோனோ வைரஸ் குறித்த அச்சமும் விழிப்புணர்வும் இன்றி வழக்கம் போல வெளியில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களிலும் நடைபயணமாகவும் அதிக அளவில் வெளியே சென்று வருகின்றனர். டீ வாங்க செல்வது, காய்கறி வாங்க செல்வது, வீதிகளில் வழக்கம் போல சென்று வருவது, சிறுவர்களை கூட்டமாக விளையாட அனுமதிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதனால், மத்திய மாநில அரசுகளின் உத்தரவு பயனளிக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் அமைதி காத்து வந்தனர். மற்ற மாவட்டங்களில் வீதிகளில் தேவையின்றி நடமாடுபவர்கள் மீது கடுமை காட்டி வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்ட போலீசார் அலட்சியம் கொள்வதாக தெரிவித்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று சுமார் 40 மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பின்னர், அவர்களை விடுவித்த போலீசார் உரிய அறிவுறைகளை கூறி கவனிப்புகளுடன் வழி அனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!