47th Annual Meeting of CITU
பெரம்பலூர் : 1970 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிஐடியு அமைப்பின் 47 வது ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அளவிலான பேரவை கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள அன்னை லட்சுமி நினைவகத்தில் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.சிற்றம்பலம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பி.துரைசாமி முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் இ.பொன்முடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :
மதவாத நோக்கத்தில் மத்தியஅரசு மாடுவிற்பனைக்கு தடை விதித்துள்ளது. உடனடியாக வாபஸ் பெற வேண்டும் தொழிலாளி ஒற்றுமையை சீர்குலைக்கும் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் 18.000 என்பதை அமல்படுத்த வேண்டும், காண்ராக்ட் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் முழு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பற்றி விளக்கி பேசினார்.
மாநிலக் குழு முடிவுகள் பற்றி மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி விளக்க உரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.அகஸ்டின், சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், ஆட்டோ சங்கம் சண்முகம் மற்றும் இரா.ராஜகுமாரன் எ.கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.