70 members of the CPI party people arrested
பெரம்பலூர்: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் இளங்கோவன், ராஜேந்திரன், காசிநாதன், ராமராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் ராஜூ உட்பட பலர் பேசினர்.
மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சிவபுண்ணியம் விளக்கவுரையாற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 14 பெண்கள் உட்பட 70 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்