A rally of college students on awareness about alcoholism in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் மது நுகர்வோர்களிடையே, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வளர் இளம் பருவத்தினர் மற்றும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுவிற்கு எதிரான “குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும்”, “போதை காசு கொடுத்து வாங்கும் மரணம்”, “மதுவை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் ஆர்ச், புதிய பேருந்து நிலையம் வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது.
இப்பேரணியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.