A waiting struggle to make the contract workers permanent; EB Employee Central Organization Resolution Passed!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் கோட்ட ஆண்டு பேரவைக் கூட்டம், துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைசெயலாளர் எஸ்.நல்லுசாமி வரவேற்றார். நிர்வாகிகள் எம்.சதீஷ், பி.ஜெய்சங்கர், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயற்குழு பி.நாராயணன், அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றனார். திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின் தொடக்க உரையாற்றினார். கோட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் செயலாளர் அறிக்கை வாசித்தார். வட்ட பொருளாளர் கே.கண்ணன், மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக் குழு சி.ராஜகுமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், 2014 மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும், தற்பொழுது மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில் தமிழக மின்துறை அமைச்சர் அறிவித்தபடி உடனே பணிநியமிக்க வேண்டும், களப்பிரிவு ஊழியர்களுக்கு தேவையான தளவாட சாமான்களை தடையின்றி வழங்க வேண்டும், பகுதிநேர பணியாளர்களை முழுநேர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும், பெரம்பலூர் அரியலூர் கோட்டங்களை பிரித்து மக்கள் சேவையை துரிதப்படுத்த வேண்டும், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்ததையை உடனே தொடங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி ஏப்ரல் 21 முதல் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் காத்திருப்பு போரட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!