Abroad, those from migrant orders to do register: Perambalur Collector V.Santha

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே. சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு முதமைச்சர் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடையே கைகழுவுதல், பொது இடங்களுக்கு வெளியே செல்லாமல் இருத்தல் என பல்வேறு நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்பவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படுகிறது.

இம்மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களை கொண்டு சுழற்சி முறையில் இயங்க பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நோய் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவாகி இன்று பல்வேறு நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அதனை தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகை தரும் அனைத்;து பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நோய் பரவலை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மார்ச் 1க்கு பிறகு வெளிநாடுகளிலிருந்தோ அல்லது வெளிமாநிலங்களிலிருந்தோ எவரேனும் வருகை புரிந்து அவர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரியை அவர்கள் தற்பொழுது தங்கியுள்ள இடத்தில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் 1077 என்ற எண்ணுக்கு தகவல் அளித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தங்களது பயண விவரத்தை பதிவு செய்ய தவறுபவர்கள் மீது நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அவ்வாறு வெளிநாடுகளிலிருந்தோ, வெளி மாநிலங்களிலிருந்தோ வருகைபுரிந்தவர்கள் எவராயினும் தங்களுடைய பயண விவரத்தை பதிவு செய்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!