All-India tennis match: Won the first prize at Perambalur Golden Gates School

கோயம்புத்தூரில் நடந்த அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் செ.சூர்யா முதல் பரிசை வென்றார். மற்ற மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர். அவர்களை பள்ளி தாளாளர் பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், செயலாளர் அங்கையர்கண்ணி ரவிச்சந்திரன், ஆகியோர் வாழ்த்திய போது எடுத்தப்படம்

அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் சாதனை

பெரம்பலூர். மார்ச்.28-

அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவன் சூர்யா முதல் பரிசை வென்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பத்து வருடங்களாக டென்னிஸ் போட்டியில் பல வெற்றியாளர்களை அகில இந்திய அளவில் பங்கு பெறச் செய்து சாதனைகள் பல புரிந்து கொண்டு இருக்கும் கோல்டன் கேட்ஸ் பள்ளி , கோயம்புத்தூரில் நடந்த கே ஜி ரமேஸ் டென்னிஸ் அகாடமி நடத்திய அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி நடத்தியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, உத்திர பிரேதஷ் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிருந்து 200க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

கோல்டன் கேட்ஸ் டென்னிஸ் அகடமி சார்பில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 8 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அகில இந்திய அளவில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ். சூரியா முதல் பரிசை வென்றார். மேலும், எஸ். விஜய் கால் இறுதிக்கும் எம். தேவதர்சன், எம். கரன்பாலாஜி மற்றும் எஸ்.பி. ஆகாஷ் ஆகியோர் இரண்டாம் சுற்றுவரை தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், செயலாளர் அங்கையர்கண்ணி ரவிச்சந்திரன், பள்ளியின் முதல்வர்கள் சு. சேகர், பி.ஆர்.வி.மனோஜ் ஆகியோர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பள்ளியின் டென்னிஸ் பயிற்ச்சியாளர் எஸ். பாப்சிகரன், உதவி பயிற்ச்சியாளர் பாரதி மற்றம் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!