Arrested in connection with robbery cases near Perambalur arrested and imprisoned
பெரம்பலூர் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையனை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கலமேடு, திட்டக்குடி (கடலூர்) உள்ளிட்ட காவல் நிலையங்களில் நகை மற்றும் பணம் திருடு போவதாக வந்த புகாரின் பேரில், மங்கமேடு போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்ததை அடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் மாவீரன் என்ற தியாகராஜன் என்பது தெரியவந்தது.
பின்னர், அவர் அளித்த வாக்குமூலத்தின் ரொக்கம் ரூ.400, ஒரு மொபட், முக்கால் சவரன் தங்க கட்டி, மற்றும் 4 சவரன் மதிப்பு தங்க சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.