Arutra darshan festival at Shivayalas in Perambalur district: large number of participants

தமிழகம் முழுவதுமுள்ள சிவாலயங்களில் இன்று ஆருத்ரா எனப்படும் திருவாதிரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

சிவனின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும் நடராஜர் வடிவம் தமிழகத்தில் கடந்த 1,500 ஆண்டுகளுக்கு மேலாக போற்றப்பட்டு வருகிறது.

இந்துமத சாஸ்திரங்களில் சிவனின் அடையாளமாக திருவாதிரை நட்சத்திரம் கருதப்படுகிறது.

மார்கழி மாதம் பவுர்ணமியோடு கூடி வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, ஆடல்வல்லானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.

இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திலும், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் ஆலயத்திலும், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஈஸ்வரர் ஆலயத்திலும், வெங்கனூர் விருதாச்சலேஷ்வரர் ஆலயத்திலும், திருவாளந்துறை தேளீஸ்வரர், குன்னம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலும், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலும் என பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள சிவாலயங்களில் நடராஜர் மற்றும் அம்பாளுக்கு மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திர நாளான இன்று 32 வகையான திரவியங்களால் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் வழிபாடுகளும் நடைபெற்றது.

இதில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவகாம சுந்தரி சமேத ஆனந்த தாண்ட நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் அந்தந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!