At Perambalur, employees protested over 7 demands

பெரம்பலூரில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மின் மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் தொகையை வழங்க வேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்த கூலி தொகையை வழங்க வேண்டும், மாத ஊதியத்தை முதல் தேதியில் வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், ஊராட்சி பகுதியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மின்மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட, .ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!