At the Women’s Day ceremony near Perambalur, the women were exhausted as they were waiting for the Collector to be encouraged.

மகளிர் தினமான நேற்று அரசு விடுமுறை என்பதால், இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில், மகளிரை கொண்டு இயங்கும் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கம் புதிதாக தொடங்க திட்ட மிடப்பட்டு, அதற்கான தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இதற்கான விழா இன்று காலை முதலே அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், மகளிர் ஆகியோர் இணைந்து திறப்பு விழாவிற்கான ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக காலை 9.30 மணிக்கு விழா நடக்கும் இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவை வரவேற்க கூடிய பொதுமக்கள் பூச்செண்டுடன் காத்திருத்தனர். இவர்களுடன், கால்நடைத்துறை, வருவாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும், காத்திருந்தனர். ஆர்வமுடன் காத்துகிடந்தவர்களுக்கு 10 மணியும், கடந்தது, பின்னர், 11 மணி, 12 மணி, 1 மணி என அனைத்தும் கடந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அதோ வருகிறார், இதோ வருகிறார் என காத்து காத்து சோர்ந்து போயினர். மேலும், மகளிர் அமைப்பினரும், ஆர்வம் குறைந்து ஆரம்பமே இப்படியா, வரமுடியவில்லை என்றால் கூட பரவாயில்லை, அதை தகவலாகத் சொல்லியிருக்காலாமே என ஆதங்கப்பட்ட பெண்கள், பெரும்பாலனோர், விவசாயத் தொழிலுடன் உபத் தொழிலாக கால்நடை வளர்ப்பிலும், ஈடுபட்டுள்ளாதால், அவற்றை மேய்ச்சலுக்கு விட சிரமமப்பட்டனர். மேலும், மதியம் 1மணி ஆகிவிட்டதால் அவர்களே திறந்து வைத்து கொண்டனர். பின்னர், காலம் கடத்திய கலெக்டர், மகளிர் தின விழாவில் பெண்ணான மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அலட்சியப்படுத்திய சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொழிலதிபர்கள், மற்றும் பிற நிறுவனங்களுக்கு காட்டும் அக்கறையை தங்களுக்கு காட்ட மறுப்பதோடு கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது என்கிற காந்தியின் கொள்கையையும் மறந்து வருகிறார் என நொந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!