Become. 5 – MGR Century Festival at Perambalur: Call of the ceremony for the hall
பெரம்பலூரில் வரும் ஆக. 5 ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிர அரசு செலவு சார்பில் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்தையும் செய்து வருகிறது. இன்று காலை, பெரம்பலூர் பாலக்கரை அருகே நூற்றாண்டு விழா நடக்கும் அரங்கத்திற்கான கால்கோல் விழா நடந்தது. வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க கால்கோல் நடத்தப்பட்டது.
இதில் சுற்றூலத்துறை அமைச்சர் வெல்லமண்டி. நடராஜன், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் வளர்மதி, அரசு கொறடா தாமரை.ராஜேந்திரன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, அதிமுக ஒன்றிய செயலளார்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்) எசனை – கீழக்கரை பன்னீர் செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.